சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் களவுபோன வழக்கின் விசாரணை அறிவியல் பூர்வமாக நடைபெறுவதாக சிபிசிஐடி டிஜிபி தகவல்

0 1040

சென்னையில் சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் களவுபோன வழக்கில், விசாரணை அறிவியல் பூர்வமாக நடைபெறுவதாக சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப் தெரிவித்துள்ளார்.

சென்னை சவுகார்பேட்டை சுரானா நிறுவனத்தில் 400 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள், அங்குள்ள பெட்டகத்தில் வைத்துப் பூட்டி மூடி முத்திரையிட்டனர்.

இந்தத் தங்கத்தில் 103 கிலோ காணாமல் போனதால், உயர்நீதிமன்றத் தலையீட்டை அடுத்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. சுரானா நிறுவனத்திற்கு சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப், ஐஜி சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதீப் வி பிலிப், வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments