புதிய நாடாளுமன்றக் கட்டட வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

புதிய நாடாளுமன்றக் கட்டட வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணிகள் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
புதிய கட்டுமானப் பணிகள் நடக்கும் போது சுற்றுச்சூழலை கவனத்தில் கொள்ளவில்லை என்று பல்வேறு தரப்பினர் வழக்கு தொடுத்திருந்தனர்.
கடந்த மாதம் நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது, டிசம்பர் 10ம் தேதி பூமி பூஜை நடத்தலாம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. முன்னதாக பழைய கட்டடங்களை பாதுகாத்தல், மரங்களை இடம் மாற்றுவது போன்ற செயல் திட்டங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Comments