உத்தரப்பிரதேசத்தில் சுடுகாட்டுத் தகனக்கூடம் இடிந்து விழுந்ததில் 25 பேர் பலி, 16 பேர் காயம்

0 3065
உத்தரப்பிரதேசத்தில் சுடுகாட்டுத் தகனக்கூடம் இடிந்து விழுந்ததில் 25 பேர் பலி, 16 பேர் காயம்

த்தரப்பிரதேசத்தின் முராத்நகரில் சுடுகாட்டுத் தகனக் கூடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

காசியாபாத் அருகே முராத்நகரில் இறந்தவரின் இறுதிச்சடங்கின்போது தகனக் கூடம் இடிந்து விழுந்தது. சம்பவ இடத்திலேயே 17பேர் பலியான நிலையில் மருத்துவமனையில் மேலும் 8பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 25ஆகியுள்ளது.

தகனக் கூடம் தரமில்லாமல் கட்டப்பட்டதே விபத்துக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ள பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சுடுகாட்டுக் கூரை இடிந்தது தொடர்பாகக் கட்டுமானப் பொறியாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments