திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்பட்டன

0 1960
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்பட்டன

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள்  நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்பட்டன.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திறக்கப்பட்ட சொர்க்க வாசல் இன்று நள்ளிரவு ஆகம விதிப்படி மூடப்படுகிறது. இதனை தொடர்ந்து  4ஆம் தேதி முதல் வழக்கம்போல் நடைபெறக்கூடிய தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்கான 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள்  இம்மாதம் 31-ஆம் தேதி வரை ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலவச தரிசன டிக்கெட்டுகள் நள்ளிரவு 12 மணி முதல் திருப்பதியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ் மற்றும் விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வு அறையில் வழங்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments