மத்திய ரிசர்வ் காவல்படை வாகனத்தை வேகமாக ஓட்டியதில் சிறுவன் உயிரிழப்பு

0 186

காஷ்மீரில் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் காவல்படை வாகனம் ஏறி ஒருவர் உயிரிழந்தது குறித்து சிஆர்பிஎப் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீநகர் ஜாமியா மசூதி அருகே சென்ற மத்திய ரிசர்வ் காவல்படை வாகனம் மீது இளைஞர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதற்காக வாகனத்தை எடுத்தபோது அதில் சிக்கி ஒரு சிறுவன் உயிரிழந்தான்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 2 வழக்குகளைக் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுல் சிஆர்பிஎப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபடுதல், கலகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கல்வீசித் தாக்கியவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதால், ஸ்ரீநகர், பட்காம் ஆகிய பகுதிகளில் இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments