நான் ரெடி? நீங்க ரெடியா? அமைச்சர் வேலுமணிக்கு மு.க.ஸ்டாலின் சவால்

0 8680
அதிமுக அமைச்சர்களின் ஊழலை நிரூபிக்கா விட்டால் அரசியலை விட்டு விலக தான் ரெடி, நிரூபித்து விட்டால் அரசியலை விட்டு விலக அதிமுக அமைச்சர்கள் ரெடியா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். தனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் தேவராயபுரத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பொதுமக்களுடன் கலந்துரையாடினார். தான் செல்லுமிடம் எல்லாம் மகிழ்ச்சியையும் எழுச்சியையும் பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த எழுச்சியை கைது நடவடிக்கைகள் மூலம் அரசு அடக்கி விடமுடியாது என்றார்.

பலூனை உடைத்து விளையாடும் ராஜேந்திரபாலாஜியை அமைச்சராக வைத்துக் கொண்டிருக்கும் அதிமுகவிற்கு, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் செல்லும் திராணி இருக்கின்றதா? என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஊழலை நிரூபிக்கா விட்டால் அரசியலை விட்டு விலகி விடுவாரா என தன்னைப் பார்த்து அமைச்சர் வேலுமணி கேட்பதாகவும், இந்த சவாலுக்கு அவர் தயாரா என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து அவர்கள் மீது தண்டணை கொடுக்கப்படும் என திமுக தலைவர் கூறினார். ஜெயலலிதா மரண மர்மம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமா? என்று ஸ்டாலின் கேட்ட போது, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments