கரூர் : மகன் இறந்த செய்தியை கேட்ட தந்தை மாரடைப்பால் மரணம்!

0 44572

கரூர் அருகே மகன் உயிரிழந்த செய்தியை கேட்ட தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தை அடுத்த குஞ்சம்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் அதேப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் பாலாஜி. இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், பாலாஜி அவரது வீட்டில் பழுதடைந்திருந்த ஸ்பீக்கர்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. பாலாஜியின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்ட சிறுவனின் தந்தை செல்லமுத்து அதிர்ச்சியடைந்து நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இருவரது உடலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சின்னதாராபுரம் மற்றும் கரூர் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments