மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது - தமிழக அரசு

0 2789
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது - தமிழக அரசு

அடிக்கல் நாட்டி சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது,  நிலத்தை கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் காலதாமதம் ஆவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வழக்கில் பதிலளிக்க உத்தரவிட்டு இரண்டு மாத காலம் ஆகியும் முறையாக பதிலளிக்காதது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஆர்வம் அரசுக்கு இல்லை என்பதை காட்டுவதாக  நீதிபதி கிருபாகரன் அமர்வு தெரிவித்தது.

இந்நிலை தொடர்ந்தால்  சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments