குடிபோதையில் ஓட்டிச் செல்லப்பட்ட கார் மாணவி மீது மோதி விபத்து

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சவிதா பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் குடிபோதையில் தாறுமாறாக ஓட்டிச் செல்லப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா கார் ஒன்று, நடந்து சென்ற கல்லூரி மாணவி மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரி கார்டு மீது முதலில் மோதிய கார், பின்னர் அருகிலிருந்த சென்டர் மீடியனில் ஏறி பாதையின் மறுபக்கம் நடந்து சென்ற கல்லூரி மாணவி மீது மோதியது.
கார் மோதிய வேகத்தில் அந்த மாணவி சில அடி தூரத்துக்கு சாலையில் தேய்த்துச் செல்லப்பட்டார். மீண்டும் பாதை மாறிய கார், அங்கிருந்த மேலும் இரண்டு பேரிகார்டுகளை இடித்துத் தள்ளிவிட்டு, மரம் ஒன்றின் மீது மோதி நின்றது.
கார் மோதி படுகாயமடைந்த மாணவி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், காரை ஓட்டி வந்த குடிபோதை ஆசாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments