இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்...

0 2010
இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக்கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக்கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடாவில் ராமநாதபுரம் மாவட்டம் அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நிலவும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக்கனமழையும் பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரப் பகுதிக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் கடலூர் மாவட்டம் கொத்தவசேரியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments