ஜெயலலிதாவின் 4-வது ஆண்டு நினைவு தினம்... முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று அஞ்சலி

0 5342
ஜெயலலிதாவின் 4-வது ஆண்டு நினைவு தினம்... முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் இன்று மலர்அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு இதே நாளில் மறைந்தார். அவரது நினைவுநாளையொட்டி, காலை 10.45 மணிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் ஜெயலலிதாவின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments