பிரிட்டனில் ஊரடங்கால் வேலையும் வருமானமும் இழந்த மக்கள் உணவுக்குத் தவிப்பு

பிரிட்டனில் ஊரடங்கால் வேலையும் வருமானமும் இழந்த மக்கள் உணவுக்குத் தவிப்பு
பிரிட்டனில், கொரோனா பாதிப்பின் எதிரொலியாக, ஏராளமான மக்கள் உணவுக்காக போராடுவதாக, அங்குள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.
பிரிட்டனில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தபட்டதால் ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். பிரிட்டனில் வேலையில்லாதோர் விகிதம் 4 புள்ளி 8 விழுக்காடாக உயர்ந்திருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் வேலையின்மை எட்டு விழுக்காடாக உயரும் எனக் கணிக்கப்பட்டிருப்பதால், அதை எதிர்கொள்ள அரசு, அவசர வேலை வாய்ப்பு மானியத் திட்டத்தை மார்ச் வரை நீட்டித்துள்ளது. இதனால் அறக்கட்டளைகளால் இலவச உணவு வழங்கும் இடங்களுக்கு மக்கள் படையெடுப்பது அதிகரித்துள்ளது.
Comments