மேகம் கருக்குது.. தம்ஜிக்கு... தம்ஜிக்கு..! சாலையில் குளிக்குது.. தும்ஜிக்கு... தும்ஜிக்கு..!
சிதம்பரத்தில் ஒரே நாளில் 34 செண்டி மீட்டர் கனமழைக் கொட்டித்தீர்த்த நிலையில், சாலையில் தேங்கிய மழை நீரில் உள்ளூர்வாசி ஒருவர் சாகவாசமாக சோப்பு போட்டு நீச்சல் அடித்து குளித்த காட்சிகள் வெளியாகி உள்ளது.
சிதம்பரம் நகரில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த 34 செண்டி மீட்டர் கனமழையால் நகரின் முக்கிய வீதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே தனது வாழிடம் தேடி வந்த மழை நீரில் உள்ளூர் வாசி ஒருவர் உடலுக்கு சோப்பு போட்டு உற்சாக குளியல் போடலானார்
சோப்பு போட்டு முடித்ததும், ஏதோ நீச்சல் குளத்தில் குதிப்பது போல சாலையில் வெள்ளமென தேங்கிய மழை நீரில் குதித்து.. நீச்சல் அடித்து உற்சாக குளியல் போட்டார்
சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட ஊரே வெள்ளக்காடானதால், பலர் பாதிப்புக்குள்ளானாலும், அந்த ரணகளத்திலும், கிளுகிளுப்பாக இவர் போட்ட குளியல் காட்சி வீடியோ வைரலாகி வருகின்றது.
தற்போது வெள்ள நீரை வடியவைக்க அங்கு தேவையான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.
Comments