புரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு: தமிழ்நாடு அரசு

0 9661
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை

அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதற்கு ஈடாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமையன்று, அரசு அலுவலகங்கள் செயல்படும் என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களிலும் அத்தியாவசிய பணிகள் தவிர, பிற பணிகளுக்கு பொதுமக்கள் செல்வதை தவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments