நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலைய காற்று மாசினால் இதுவரை இந்தியாவில் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான மரணங்கள்- தி லான்செட் நாழிதழ்

0 909
நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலைய காற்று மாசினால் இதுவரை இந்தியாவில் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான மரணங்கள்- தி லான்செட் நாழிதழ்

நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் காற்று மாசின் காரணமாக இந்தியாவில் இதுவரை நான்கரை லட்சத்திற்கும் அதிகமான மரணங்கள் ஏற்பட்டதாக  பிரபல மருத்துவ இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது.

2018 ஆண்டு புள்ளிவிவரப்படி. நிலக்கரியால் ஏற்படும் காற்று மாசால் மட்டும் சுமார் 96 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அது தெரிவித்துள்ளது.

அதாவது ஒரு மணி நேரத்தில் 10 பேர் இறப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே  நிலக்கரியின் உபயோகத்தை படிப்படியாக குறைக்கும் தேவை ஏற்பட்டுள்ளதாக  அது குறிப்பிட்டுள்ளது.

இதனால் வெப்பமயமாதலை தடுப்பதுடன், மரணங்களையும் தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பம் அதிகரித்து அதனால் அதிக இறப்பு நிகழும் இரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் தி லான்செட் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments