விமான நிலையத்திற்குள் உணவு தேடி வந்த சிறுத்தை

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் விமானநிலையத்தில் பதுங்கிய சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் விமானநிலையத்தில் பதுங்கிய சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிக்கப்பட்டது.
டேராடூனில் உள்ள ஜாலிகிராண்ட் விமானநிலையத்தின் சுற்றுச்சுவரைத் தாண்டிக் குதித்த பெண் சிறுத்தை ஒன்று விமானங்களில் இரைச்சலால் பயந்து கட்டுமானப் பணிகளுக்கான இடத்தில் மறைந்து கொண்டது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் 10 மணி நேர போராட்டத்திற்குப் பின் சிறுத்தையை மீட்டு காட்டில் விட்டனர்.
ஒரு வயது நிரம்பிருக்கும் அந்தச் சிறுத்தை உணவு அல்லது தண்ணீர் தேடி வந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments