பிரேசில்: வங்கியில் கொள்ளையடித்த பணத்தை சாலையில் வாரி இறைத்த கொள்ளையர்கள்..! வீசிச் சென்ற பணத்தை அள்ளிச் சென்ற பொதுமக்கள்

பிரேசில்: வங்கியில் கொள்ளையடித்த பணத்தை சாலையில் வாரி இறைத்த கொள்ளையர்கள்..! வீசிச் சென்ற பணத்தை அள்ளிச் சென்ற பொதுமக்கள்
பிரேசிலில் வங்கியைக் கொள்ளையடித்தவர்கள் சாலை முழுவதும் பணத்தை வாரி இறைத்து வீசிச் சென்றனர்.
சான்டா கேட்டரினா என்ற இடத்தில் உள்ள 4 வங்கிகளில் 20க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் புகுந்தனர். பின்னர் அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்தவர் வங்கியில் இருந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
அப்போது நடந்த மோதலில் இருவர் காயமடைந்தனர். பணத்தை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள் சாலைகளில் வீசிச் சென்றனர். இதனைக் கண்ட மக்கள் கொத்துக் கொத்தாக பணத்தை அள்ளிச் சென்றனர்.
Comments