காதலனுடன் பெண் ஓட்டம்.. வீடுகளை சூறையாடிய கும்பல்..!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சாதி கடந்து மலர்ந்த காதலால் உருவான கலவரத்தில், காதலன் வீட்டாரின் 8 வீடுகள் மற்றும் இருசக்கரவாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த ரம்யபிரபாவும், மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபர் குமாரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திங்கட்கிழமை வாலிபர் குமார், ரம்யபிரபாவை திருமணம் செய்வதற்காக ஊரைவிட்டு கூட்டி சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், பெண்ணை கூட்டி சென்ற குமாரின் வீடு மற்றும் அவரின் உறவினர்கள் வீடுகளுக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர்
இதில் 8 ஓட்டு வீடுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியதோடு, வீட்டிற்கு முன்பாக நின்ற 4 இரு சக்கர வாகனங்களை அடித்து உடைத்தனர். மேலும் ஒரு குடிசை வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பி ஒடிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற சாயல்குடி போலீசார் வீடுகளை சேதப்படுத்தியதாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பெண் வீட்டாரை தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் அங்கு மோதல் ஏதும் நிகழாமல் இருக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Comments