வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்து துறை மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க எந்த ஒரு நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க எந்த ஒரு நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது மிரர் வியூ கண்ணாடிகளை உட்புறமாக பயன்படுத்தாமல் வெளியே பயன்படுத்தி வரும் ஆட்டோக்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.
விதி மீறிய வாகனங்கள் மீது லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதிலில் எந்த ஒரு திருப்தியும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், அடுத்த விசாரணையின் போது போக்குவரத்து துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
Comments