ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - முதலமைச்சர்

0 2899
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - முதலமைச்சர்

சாதி வாரியான தரவுகளை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைத்து வருவதை குறிப்பிட்டுள்ளர்.

மேலும் 69 சதவீத இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கை எதிர்கொள்ளவும் இத்தகையை புள்ளி விவரங்கள் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.

சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து அறிக்கை சமர்பிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments