இலங்கையின் கொழும்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கைதிகளின் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

இலங்கையின் கொழும்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கைதிகளின் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு
இலங்கையின் கொழும்பு அருகே சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான கைதிகளின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
மஹரா சிறைச்சாலையில் சில கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை தனி அறைக்கு மாற்றக்கோரி மற்ற கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிறையில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற சிலர், சிறைச்சாலையின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர்.
கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 பேர் பலியான நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Comments