வாட்டர் ரெசிஸ்டன்ட் ஐஃபோன் என விளம்பரம் செய்தது தொடர்பாக இத்தாலியில் ஆப்பிள் நிறுவனத்திற்கு 12 மில்லியன் அபராதம்

0 1863
வாட்டர் ரெசிஸ்டன்ட் ஐஃபோன் என விளம்பரம் செய்தது தொடர்பாக இத்தாலியில் ஆப்பிள் நிறுவனத்திற்கு 12 மில்லியன் அபராதம்

வாட்டர் ரெசிஸ்டன்ட் ஐஃபோன்" என விளம்பரம் செய்தது தொடர்பாக, இத்தாலியில் ஆப்பிள் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பல ஐஃபோன் மாடல்கள் வாட்டர் ரெசிஸ்டன்ட் எனப்படும் நீர்காப்புத் தன்மை கொண்டவை என விளம்பரம் செய்யப்பட்டதாகவும், சில குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே அவ்வாறு பாதுகாப்பாக இருக்கும் என்பதை ஆப்பிள் நிறுவனம் விளம்பரப்படுத்த தவறி விட்டதாகவும் இத்தாலிய வர்த்தக ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.

வாட்டர் ரெசிஸ்டன்ட் என விளம்பரம் செய்துவிட்டு, திரவங்களால் சேதமடைந்தால் வாரண்டி பொருந்தாது என டிஸ்கிளெய்மரில் கூறுவது வாடிக்கையாளர்களை ஏய்க்கும் வேலை என்றும் இத்தாலிய வர்த்தக ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments