அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் நாயுடன் விளையாடுகையில் காயம்

0 1950
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் நாயுடன் விளையாடுகையில் காயம்

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன், நாயுடன் விளையாடுகையில் கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டு காயமடைந்துள்ளார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன், ஜனவரி 20ம் தேதி முறைப்படி பதவியேற்கவுள்ளார்.

78 வயது ஆகும் அவர், கடந்த சனிக்கிழமை தனது செல்ல பிராணியுடன் விளையாடுகையில் காயமடைந்ததாகவும், இதையடுத்து எலும்பியல் நிபுணரை (orthopedist) சந்தித்ததாகவும், அப்போது எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதாகவும் அவரது அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதல்கட்ட சோதனையில் எழும்பு எதுவும் முறியவில்லை என தெரிய வந்துள்ளதாகவும் அலுவலக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments