சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 4,574 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 36 ஆயிரத்து 592 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 4,524 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 400 ரூபாய் சரிந்து 36 ஆயிரத்து 192 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
நேற்று ஒரு கிலோ கட்டி வெள்ளி 64 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 1,400 ரூபாய் குறைந்து 63 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Comments