சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச மராத்தான் ஓட்டப் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்பு

0 457
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச மராத்தான் ஓட்டப் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்பு

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச மராத்தான் ஓட்டப் போட்டியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்போட்டி, கொரோனா காரணமாக இந்த ஆண்டு நடத்தப்படுமா என சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில் அப்போட்டி திட்டமிட்டபடி நேற்று நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு 38 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிலையில், இந்த ஆண்டு  9 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு ஏராளமானோர் கலந்து கொண்டு, போட்டி இலக்கான 42 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடி வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments