டெல்லியில் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நரேந்திரசிங் தோமர், ஜே.பி.நட்டா ஆலோசனை; விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதம்

0 870
டெல்லியில் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நரேந்திரசிங் தோமர், ஜே.பி.நட்டா ஆலோசனை; விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதம்

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் கூடி விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

நீண்ட நேரம் நீடித்த ஆலோசனைகளுக்குப் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். விவசாயிகள் தங்களுக்குப் போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்துக்கு வந்தால் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்திருந்தார் அமித் ஷா.

ஹைதராபாதில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்த போது விவசாயிகளுக்கு நன்மை செய்யவே சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து விவசாயிகள் நெடுஞ்சாலையில் டிராக்டர்களையும் வாகனங்களையும் நிறுத்தி மூன்றாவது நாளாகப் போராடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments