பிரதமர் மோடியின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது டி.ஆர்.டி.ஓ.

பிரதமர் மோடியின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது டி.ஆர்.டி.ஓ.
பிரதமர் மோடியின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஓ. உருவாக்கியுள்ளது.
இந்த அமைப்பு பிரதமர் மோடியின் வீடு மற்றும் கார் கன்வாயில் இடம்பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள ரேடார் வசதியின் மூலம் பிரதமர் மோடி இருக்கும் இடத்திலிருந்து 2 முதல் 3 கிலோ மீட்டர் வரை எந்த ஒரு ட்ரோன்களும் அவரை நெருங்க முடியாது.
எதாவது ட்ரோன்கள் பிரதமரை நோக்கி வரும் போது இந்த அமைப்பு அவற்றின் தொலைதொடர்பை செயலிழக்க வைப்பதோடு, உடனடியாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கும். இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
Comments