தமிழகத்தில் கொரோனா மரணங்கள் பெருமளவில் குறைந்து வருகிறது - தமிழக சுகாதாரத்துறை

0 1836
தமிழகத்தில் கொரோனா மரணங்கள் பெருமளவில் குறைந்து வருகிறது - தமிழக சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில், கொரோனா மரணங்கள் பெருமளவில் குறைந்து, 9 பேர் மட்டுமே ஒரே நாளில் உயிரிழந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 471 பேர், குணம் அடைந்து வீடு திரும்பினர். ஒரே நாளில் மட்டும், புதிதாக ஆயிரத்து 459 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

சென்னையில், புதிதாக 398 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டது. பெரம்பலூர், மீண்டும், புதிதாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது.

அரியலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் உள்பட 8 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட உயிரிழக்க வில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments