வி.பி.எப். கட்டணத்தைச் செலுத்த முடியாது எனத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு... புதிய திரைப்படங்களைத் திரையிடுவதில் சிக்கல்

0 1791
வி.பி.எப். கட்டணத்தைச் செலுத்த முடியாது எனத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு... புதிய திரைப்படங்களைத் திரையிடுவதில் சிக்கல்

டிஜிட்டல் முறையில் படங்களைத் திரையிடுவதற்கான வி.பி.எப் கட்டணத்தைச் செலுத்துவதில்லை எனத் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதால் புதிய படங்களைத் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

படங்களை டிஜிட்டல் முறையில் திரையரங்கங்களில் திரையிட விர்ச்சுவல் பிரின்ட் கட்டணத்தை, சம்மந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்குத் தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்தனர். இந்தக் கட்டணத்தைத் திரையரங்கங்களே ஏற்க வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் இடையே சிக்கல் எழுந்த நிலையில், 60 விழுக்காடு கட்டணச் சலுகை அளிப்பதாக கியூப் டிஜிட்டல் நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில் கட்டணத்தை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் படங்களைத் திரையரங்குகளுக்குக் கொடுக்காமல் ஓடிடியில் வெளியிட வேண்டியது வரும் என்றும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் புதிய திரைப்படங்களைத் திரையரங்கங்களில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments