கொரோனா தடுப்பூசி வந்தாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் - ஐசிஎம்ஆர் தலைவர்

0 1338
கொரோனா தடுப்பூசி வந்தாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் - ஐசிஎம்ஆர் தலைவர்

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசத்தை தொடர்ந்து அணிய வேண்டும் என ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.

லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி ஏற்பாடு செய்த காணொலி கருத்தரங்கில் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் இந்தியாவின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்றார்.

வரும் ஜூலைக்குள் நாட்டில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிச்சயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வளர்ந்து வரும் நாடுகளில் 60 சதவிகித நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசியை சப்ளை செய்யும் என்றார் அவர்.

முகக்கவசங்களை துணியால் ஆன தடுப்பூசி என்று வர்ணித்த அவர், அவற்றை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments