கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சிவகங்கையில் 4ம் தேதி முதலமைச்சர் ஆய்வு

0 757
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சிவகங்கையில் 4ம் தேதி முதலமைச்சர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து வரும் 4ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒருகட்டமாக சிவகங்கையில் 4ம் தேதி அவர் ஆய்வு செய்யவுள்ளார்.

சென்னையிலிருந்து 4ஆம் தேதி மதுரைக்கு செல்லும் முதலமைச்சர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மதுரை மாநகர் மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைத்திடும் வகையில் முல்லைப் பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இதையடுத்து சிவகங்கை சென்று அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments