ஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..! குறுக்கு வழி ஓட்டுனருக்கு பளார்ஸ்

0 53144
அரியலூர் அருகே ஊருக்குள் பேருந்தை கொண்டு வராமல் ஊருக்கு வெளியே பயணிகளை இறக்கிவிட்டுச் சென்றதோடு, ஊருக்குள் வர நேரமில்லை என்றதால் தனியார் பேருந்து ஓட்டுனரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

அரியலூர் அருகே ஊருக்குள் பேருந்தை கொண்டு வராமல் ஊருக்கு வெளியே பயணிகளை இறக்கிவிட்டுச் சென்றதோடு, ஊருக்குள் வர நேரமில்லை என்றதால் தனியார் பேருந்து ஓட்டுனரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கீழப் பழுவூர் ..!

இங்கு புகழ்பெற்ற தனியார் சிமெண்டு ஆலைகளும் ,சர்க்கரை ஆலையும் அமைந்துள்ளதால் பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு பணி நிமித்தமாக வந்து செல்வது வழக்கம்

இந்த வழியாக செல்லும் பேருந்துகள் ஊருக்குள் இருக்கின்ற பேருந்து நிலையத்துக்கு வராமல் நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. விபத்துகளை தவிர்க்கும் வகையில் அனைத்து பேருந்துகளும், பேருந்து நிலையத்துக்குள் வந்து பயணிகளை இறக்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்று கீழப்பழுவூர் காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.

போலீசாரின் அறிவுறுத்தலை மதிக்காமல் பெரும்பாலான பேருந்து ஓட்டுனர்கள் நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டுச்சென்றனர். சம்பவத்தன்று கீழப்பழுவூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமியின் கணவர் மருதமுத்து மற்றும் அப்பகுதி மக்கள் பேருந்துகளை மறித்து பேருந்து நிலையத்துக்குள் சென்று வரும்படி கூறினர்.

அரசு பேருந்து, தனியார் பேருந்து என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து பேருந்துகளையும் பேருந்து நிலையத்திற்குள் சென்று வர அறிவுறுத்திய நிலையில் திருச்சியிலிருந்து ஆண்டிமடம் நோக்கிச்சென்ற பி.எல்.ஏ என்ற தனியார் பேருந்து ஓட்டுனர், பேருந்து நிலையத்துக்குள் செல்ல நேரமில்லை என்று கூறியதால் பேருந்தை செல்லவிடாமல் தடுத்தனர்.

பேருந்தை சாலையின் குறுக்காக மறித்து நிறுத்திய ஓட்டுனர் கீழே இறங்கி, மருதமுத்து குழுவினருடன் வாக்குவாதம் செய்த நிலையில் அந்த பேருந்தில் பயணித்த மற்றொரு ஓட்டுநரான குமார் என்பவர் ஆபாசமாக பேசியதால் கைகலப்பு உருவானது

இருதரப்பினரும் ஆபாச வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டு குமாரை சூழ்ந்து நின்று தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

ஒரு கட்டத்தில் ஊராரின் தர்ம அடியால் நிலை தடுமாறிபோன ஓட்டுனரை தாமதமாக வந்த போலீசார் மீட்டனர். அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

நேரமில்லை என்று சொல்லி ரகளையை தொடங்கி வைத்த ஓட்டுனர், விழுந்த அடிகளை தொடர்ந்து பேருந்தை ஊருக்குள் ஓட்டிச்சென்றார். இங்கு மட்டுமல்ல தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தனியார் பேருந்துகள் பெரிய நகரங்களுக்கு இடையில் உள்ள சிறிய ஊர்களில் பேருந்தை முறையாக நிறுத்திச்செல்வது கிடையாது என்றும் அந்த பயணிகளை ஊருக்கு வெளியே இறக்கிவிட்டுச்சென்று விடுவதாகவும் ஆதங்கப்பட்ட கிராமப்புற பயணிகள், சில பேருந்துகளில் இடையில் உள்ள ஊர்களை சேர்ந்த பயணிகளை பேருந்தில் ஏறவே அனுமதிப்பதில்லை..! என்றும் ஆதங்கம் தெரிவித்தனர்.

இந்த மோதல் சம்பவம் நடந்த பின்னர் வந்த காவல் துறையினர், முதலிலேயே முறையாக நின்று ஒழுங்குபடுத்தி இருந்தால் இது போன்ற கைகலப்பு சம்பவங்கள் அங்கு நிகழ்ந்திருக்காது.

அதே நேரத்தில் நடுவில் உள்ள ஊர்களை சேர்ந்த பயணிகளை புறக்கணித்தால் இப்படித்தான் சில சமயங்களில் பல அடிகள் விழும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments