குளிர்காலம், பண்டிகை காலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 1821
குளிர்காலம், பண்டிகை காலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

குளிர் காலம், பண்டிகை காலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், இணை நோய் பாதிப்புடன் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த பின் பேசிய அவர், தமிழகத்தில் தொடர்ந்து 3 வாரம் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் கொரோனாவே இருக்காது என்றார்.

மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments