ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு.. பலத்த பாதுகாப்புடன் வாக்களித்த மக்கள்..!

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் வருகிற டிசம்பர் 19ந்தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22ந்தேதி நடைபெறும்.
இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. மொத்தம் உள்ள 280 தொகுதிகளில் இன்று காஷ்மீரில் 25 மற்றும் ஜம்முவில் 18 என மொத்தம் 43 தொகுதிகளுக்கு தேர்தல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
Comments