இந்தியாவில் 7-ல் ஒருவர், உளவியல் பிரச்சினையால் பாதிப்பு? WHO அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

0 1065
இந்தியாவில் ஏழு நபர்களுக்கு ஒருவர், உளவியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல் உண்மையா என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்சி அல்லது மதுரை மத்திய சிறையில் மனநல சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவ வசதி ஏற்படுத்தக் கோரிய மனு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மக்கள் தொகையில் மனம் மற்றும் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் ஏதும் கள ஆய்வு மேற்கொண்டு உள்ளதா ? அவ்வாறு கள ஆய்வு மேற்கொண்டிருந் தால் கடைசியாக எப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்திய மக்கள்தொகையில் அதிகமானோர் பாதிக்கப்படும் உளவியல் பிரச்சனை என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, மத்திய-மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments