சென்னையில் வழிப்பறி கொள்ளையனை சினிமா பாணியில் விரட்டிபிடித்த காவல் உதவி ஆய்வாளர்

0 9775
சென்னையில் வழிப்பறி கொள்ளையனை சினிமா பாணியில் விரட்டிபிடித்த காவல் உதவி ஆய்வாளர்

சென்னை மாதவரத்தில் வழிப்பறி கொள்ளையனை சினிமா பாணியில் உதவி ஆய்வாளர் விரட்டிபிடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

மணலிபுதுநகரை சேர்ந்த ரவியின் செல்போனை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நேற்று பறித்து சென்றனர்.

இதைக் கண்ட உதவி ஆய்வாளர் ஆன்டலின் ரமேஷ், மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று மடக்கினார். 2 பேரில் ஒருவன் தப்பியோடிவிட, இன்னொருவன் சிக்கினான்.

விசாரணையில் உதவி ஆய்வாளரிடம் சிக்கியவன் சர்மாநகரை சேர்ந்த அருண்ராஜ் என்பதும், தப்பியோடியவன் மாத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 2 பேரையும், கூட்டாளியான ராயபுரத்தை சேர்ந்த விக்னேசையும் கைது செய்து, 1 மோட்டார் சைக்கிள், 11 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொள்ளையனை உதவி ஆய்வாளர் பிடித்த வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டதோடு, அவரை நேரில் வரவழைத்தும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments