தென் மாவட்டங்களில்.. காற்றுடன் கனமழை

மதுரை, விருதுநகர், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது.
மதுரையில் நீண்ட நாள்கள் இடைவெளிக்கு பிறகு விமான நிலையம், அவனியாபுரம், வில்லாபுரம், பெருங்குடி, சின்ன உடைப்பு, போக்குவரத்து நகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கிருஷ்ணன் கோயில், மல்லி, கூமாபட்டி வத்திராயிருப்பு, கான்சாபுரம், தம்பிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேரிரைச்சலுடன் பெய்த மழையினால் சாலைகளில் நீர் நிரம்பி ஓடியது.
தேனி மாவட்டம் பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி உள்ளிட்ட பல பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
திருப்பூர் மாநகரில் ஊத்துக்குளி சாலை, நெசவாளர் காலனி, முத்தணம்பாளையம், ராயபுரம், காலேஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மழைநீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments