பாகிஸ்தானில் தனிமையில் வாடிய யானை கம்போடியாவுக்கு இடமாற்றம்...

பாகிஸ்தானில் தனிமையில் வாடிய யானை கம்போடியாவுக்கு இடமாற்றம்...
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி செர் Cher பாகிஸ்தானில் காவன் என்ற யானையை கொண்டு செல்வதற்காக வந்துள்ளார்.
36 வயதான காவன் என்ற ஆசிய யானை தனது வாழ்வின் பெரும்பகுதியை இஸ்லாமாபாதில் உள்ள வனவிலங்குப் பூங்காவில் துணையே இல்லாமல் தனிமையில் கழித்துள்ளது.
பரிதாபகரமான நிலையில் உள்ள இந்த யானையை மீட்க விலங்குகள் நல அமைப்புகள் முயற்சி மேற்கொண்டன. இதற்கு அனுமதி அளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தமது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த செர், யானையை கம்போடியாவில் உள்ள இயற்கையான யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை பார்வையிட பாகிஸ்தான் வந்துள்ளார்.
Comments