டெல்லியில் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்ற ஏற்றுமதி நிறுவனம் ரூ.1200 கோடி மோசடி... சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை

டெல்லியில் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்ற ஏற்றுமதி நிறுவனம் ரூ.1200 கோடி மோசடி... சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை
டெல்லியில் வங்கிகளிடம் இருந்து 1,200 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்த அரிசி ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாகிகள் 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
தலைநகர் டெல்லியில் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் கனரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளிடம் இருந்து 1,200 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் மீதும் அதன் நிர்வாகிகள் 6 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
நிர்வாகிகளுக்கு சொந்தமான 8 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் சி.பி.ஐ.தெரிவித்துள்ளது.
Comments