ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்; 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
எல்லை வழியே பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்ய உதவும் வகையில், இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ரஜோரி மாவட்டம் சுந்தர்பானி செக்டாரில் பாகிஸ்தான் படையினர் இன்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ராணுவ வீரர்கள் பிரேம் குமார் பகதூர் காத்ரி, சுக்பீர் சிங் ஆகிய 2 பேர் பலத்த காயமடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Pakistan Army resorted to ceasefire violation in Sunderbani Sector, Rajouri district, #JammuAndKashmir today. Two Jawans of Indian Army - Naik Prem Bahadur Khatri and Rifleman Sukhbir Singh - got critically injured and later succumbed to injuries: PRO Defence, Jammu pic.twitter.com/u0j0kRYhkj
— ANI (@ANI) November 27, 2020
Comments