விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுப் பேச்சு நடத்த வரவேண்டும்- அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 1112
விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுப் பேச்சு நடத்த வரவேண்டும்- அமைச்சர் ராஜ்நாத் சிங்

போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுப் பேச்சு நடத்த வரும்படி விவசாயிகளுக்குப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டிராக்டர்களில் அணி அணியாக டெல்லியை நோக்கிச் சென்றுகொண்டுள்ளனர். இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த ராஜ்நாத் சிங், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு விட்டுத் தங்கள் கோரிக்கை குறித்துப் பேச்சு நடத்த வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு விவசாயி மகன் என்ற முறையில் பேச்சு நடத்த அழைப்பதாகவும், அரசு ஒருபோதும் விவசாயிகளை ஏமாற்றாது என்றும் ராஜ்நாத் தெரிவித்தார். வேளாண்துறைச் சீர்திருத்தங்கள் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட வழிவகுக்கும் என்றும், இதன் பயன்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் தெரியவரும் என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments