காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம்

0 1920
காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம்

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர்.

பரிம்போரா என்ற இடத்தில் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி காரில் இருந்த 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் படுகாயமடைந்த 2 வீரர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தனர்.

மக்கள் கூட்டமாக இருந்ததால் பயங்கரவாதிகள் மீது உடனடியாக பாதுகாப்பு படை வீரர்களால் பதிலடி தாக்குதல் நடத்த முடியாத சூழல் இருந்துள்ளது.

இதையடுத்து தாக்குதல் நடந்த பகுதியை சீல் வைத்து, பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments