சோழிங்கநல்லூர் - பெரும்பாக்கத்தில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத சுங்கச்சாவடி நிர்வாகம் சுங்கக் கட்டணம் பெறுவதில் மட்டுமே குறியாக உள்ளதாக புகார்

சோழிங்கநல்லூர் - பெரும்பாக்கத்தில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத சுங்கச்சாவடி நிர்வாகம் சுங்கக் கட்டணம் பெறுவதில் மட்டுமே குறியாக உள்ளதாக புகார்
சென்னை சோழிங்கநல்லூரிலிருந்து பெரும்பாக்கம் செல்லும் சாலையில் தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத சுங்கச்சாவடி நிர்வாகம் சுங்கக் கட்டணம் பெறுவதில் மட்டுமே குறியாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் கடந்த இரு நாட்களாகக் கனமழை பெய்ததால் சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் செல்லும் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
இந்தச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் பெறும் நிர்வாகம், தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்று சுங்கச்சாவடியைப் படம்பிடித்தபோது கட்டணம் பெறாமல் வாகனங்களைச் செல்ல அனுமதித்த சுங்கச்சாவடி ஊழியர்கள், செய்தியாளர் அங்கிருந்து சென்ற பின்னர் மீண்டும் கட்டணம் பெறத் தொடங்கிவிட்டனர்.
Comments