புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் : அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் : அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை
நிவர் புயுலால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள், மீனவர்கள் - விவசாயிகள் உள்ளிட்டோரின் குடும்பங்களுக்கு உடனடி ரொக்க நிவாரணமாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொளத்தூர், சைதாப் பேட்டை, வேளச்சேரி உள்பட 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மு.க. ஸ்டாலின் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீடு இழந்தவர்களுக்கு புது வீடு கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ள மு.க. ஸ்டாலின், வேளாண் விளைபொருட்கள் இழப்பீட்டிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Comments