நிவர் புயலுக்குப் பிறகு மெரினா கடற்கரையை பார்க்க வந்தவர்கள் விரட்டியடிப்பு!

நிவர் புயலுக்குப் பிறகு மெரினா கடற்கரையை பார்க்க வந்தவர்கள் விரட்டியடிப்பு!
நிவர் புயல் கரையை கடந்த நிலையில், கடற்கரையை பார்க்கும் ஆர்வத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தவர்களை, பாதுகாப்பு கருதி, காவல்துறையினர் விரட்டி அடித்தனர்.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணாக மெரினாவுக்கு மக்கள் வர தடை நீடிக்கிறது. அத்துடன் கடல் சீற்றமாக காணப்படும் இந்த சூழலிலும், தடையை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் மெரினா வந்தனர்.
கடற்கரையில் தேங்கியுள்ள மழைநீரில் இளைஞர்கள் ஆனந்த குளியலும் போட்டனர். காவல்துறையினர் வருவதை கண்டதும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
Comments