நிவர் புயல் மற்றும் 144 தடை காரணமாக மக்கள் வீடுகளில் முடக்கம் : ஆள் அரவமின்றி வெறிச்சோடிய புதுச்சேரி

0 1756
நிவர் புயல் மற்றும் 144 தடை காரணமாக மக்கள் வீடுகளில் முடக்கம் : ஆள் அரவமின்றி வெறிச்சோடிய புதுச்சேரி

நிவர் புயல் அச்சுறுத்தல், 144 தடை உத்தரவு, பொது விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா நகரமான புதுச்சேரி ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

நிவர் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே, புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதை அடுத்து புதுச்சேரி துறைமுகத்தில் , அதிதீவிர புயலை குறிக்கும் வகையில் 10 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயலை ஒட்டி தொடர் மழை பெய்வதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

பேருந்துகள் இயக்கப்படாததால் புதுவை பேருந்து நிலையமும் வெறிச்சோடிப் போய் உள்ளது.

புயலை எதிர்கொள்ளவும், பாதுகாப்பு மற்றும் மீட்புக்கான அனைத்து நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments