புயலால் பாதிக்கப்படும் இடங்களில் அம்மா உணவகம் மூலம் சாப்பாடு- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

புயலால் பாதிக்கப்படும் இடங்களில் அம்மா உணவகம் மூலம் சாப்பாடு- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடமாடும் கட்டுப்பாட்டு அறையை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘புயல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை ,நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் குழுக்கள் அமைத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
சென்னையில் மரங்கள் முறிந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். புயலால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் செய்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.
Comments