செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 21.22 அடியாக உயர்வு

0 2388
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 21.22 அடியாக உயர்வு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. 24 அடி மொத்த உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்றைய நிலவரப்படி, 21.18 அடி அளவுக்கு நீர் இருப்பு இருந்தது.

இந்த நிலையில், நிவர் புயலால் நேற்றிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் சற்று உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 21.22 அடியாகவும், கொள்ளளவு 2913 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 220 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments