இந்திய, பூடான் எல்லையில் சீனா அமைத்துள்ள வெடிமருந்து கிட்டங்கி...வெளியான புகைப்படங்கள்

0 1350
இந்திய, பூடான் எல்லையில் சீனா அமைத்துள்ள வெடிமருந்து கிட்டங்கி...வெளியான புகைப்படங்கள்

இந்திய, பூடான் எல்லையில் உள்ள டோக்லாம் அருகே சீனா மிகப் பெரிய அளவில் வெடி மருந்து கிட்டங்கி அமைத்துள்ள படங்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செயற்கைக்கோள் படத்தில், சிஞ்சோ லா கணவாயில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவியுள்ள சீனப் படைகள் அங்கு பதுங்கு குழிகள், வெடிமருந்து கிட்டங்கிகள் போன்றவற்றை அமைத்துள்ளது.

டோக்லாமில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டால் அதனைத் சமாளிக்கும் வகையில் சீனா செயல்பட்டு வருவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பங்டா என்ற கிராமத்தை உருவாக்கியுள்ள சீனா அதற்காக சாலை வசதிகளையும் அமைத்துள்ளதும் செயற்கைக் கோள் படத்தில் தெரியவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments