ரூ.500க்கு கொரோனா பரிசோதனை: நடமாடும் ஆய்வகத்தை தொடங்கி வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லியில் 500 ரூபாய்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும், நடமாடும் ஆய்வகத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
இந்த ஆய்வகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, 6 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும். பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஆய்வகம், இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதல் பெற்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஸ்பைஸ் ஹெல்த் மற்றும் ஐசிஎம்ஆர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் ஸ்பைஸ் ஹெல்த் மற்றும் ஜெனி ஸ்டோர் நிறுவனம் இணைந்து முதல் கட்டமாக டெல்லியில் 20 நடமாடும் பரிசோதனை ஆய்வகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளன.
டெல்லியில் தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய 2400 ரூபாய் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Comments